கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் துறைமுக செயற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

கொவிட் 19 நோயாளர்களை அடையாளங்காணுவதற்கான பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வவதற்காக முல்லேரியாவில் அமைந்துள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆய்வு கூடத்தில் இருந்து மாதிரிகள் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் புதிய இயந்திரம் ஒன்றை பொருத்துவதன் காரணமாகவே இந்த நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கொழும்பு துறைமுக செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஜய இறங்கு முனையத்தின் 30 சதவீதமான சேவையாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 700 காவல்துறை அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

x