தம்பலகாமம் ஆற்றுப்பாதையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வடமராட்சி கிழக்கு – தம்பலகாமம் ஆற்றுப்பாதையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

சடமாக மீட்கப்பட்டவர் செம்பியன்பற்று, மாமுனையைச் சேர்ந்த 43 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலாக மேலதிக விசாரணைகளை பளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

x