மாவீரர்கள் தின அனுஷ்டிப்பு விவகாரம்- எஸ்.சிறீதரனிடம் காவல்துறையினர் வாக்குமூலம்

மாவீரர்கள் தினத்தை அனுஷ்டிப்பதற்காக கிளிநொச்சி கனகபுரம் பொது மயான பகுதியை தயார்படுத்த சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் உள்ளிட்ட தரப்பினரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது மாவீரர்கள் தினத்தை அனுஷ்டிப்பதற்காக கனகபுரம் பொது மயானப் பகுதியை தயார்படுத்துவதற்கு அவர்கள் செல்வதாக தகவல் கிடைக்கப்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் உள்ளிட்ட தரப்பினரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டே குறித்த செயற்பாடுகள் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

அத்துடன் இதன்போது காவல்துறையினரால் குறித்த இடம் தயார்படுத்துவதன் நோக்கம் குறித்தே தமது தரப்பினரிடம் வினவியதாகவும் அவர் எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

x