கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்புக்களில் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விசேட நடமாடும் வைத்திய சேவைகளை வழங்க கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கொழும்பு மாநகர சபையின் நோய் ஒழிப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

அத்துடன்இ தமது சுகாதார நிலைமைகள் குறித்து தொலைபேசி ஊடாக அறிந்துக்கொள்ளும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்திய குழு 24 மணித்தியாலங்களும் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

x