இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாலைத்தீவில் இருந்து வந்த 05 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3152 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் மேலும் 09 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2955 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றாளர்கள் 185 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.