புதிய அராங்கத்தின் கொள்கை திட்டத்திற்கு அமைவாக பிரதேச ரீதியாக 10 பல்கலைகழகங்களை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் இன்று கல்வியமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
உயர்கல்வி நிறுவனம் இல்லாத 10 மாவட்டங்களை தெரிவு செய்து அந்த மாவட்டங்களில் பல்கலைகழகங்களை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் அதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.