புகையிரத திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இன்று (11) இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மேல்மாகாணத்திற்கு உள்நுழைவதற்கு தொடருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புதையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பிற்பகல் வேளைகளில் மேல்மாகாணத்தில் இருந்து வெளிச்செல்லும் தொடருந்து சேவைகள் அலுத்கம, அம்பேபுஸ்ஸ, கொச்சிகடை மற்றும் அவிசாவளை வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x