கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்ட 39 கைதிகள் உணவு தவிர்ப்பில்…

புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (10) காலை முதல் அவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான குற்றச்செயல்கள் தொடர்பில் தண்டணை விதிக்கப்பட்டுள்ள 45 கைதிகளில் 39 பேர் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகளில் ´கஞ்சிபானி இம்ரான்´, ´பொடி லெசி´ மற்றும் ´வெலே சுதா´ ஆகியவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பொட்ட நௌபர், கெவுமா, ஆம் சம்பத் உள்ளிட்ட 06 கைதிகள் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா காலத்தில் உறவினர்களை சந்திக்க முடியாமை காரணமாக பெற்றுக் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி வசதியினை அகற்றியமை, கைதிகளை சந்திக்க வரும் சட்டத்தரணிகளை சோதனை செய்தல், விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த கைதிகள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.