விவசாயிக்கு காத்திருந்த பேராபத்து!

காட்டு யானை தாக்கியதில்  விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட மல்வத்தை மல்லிகை தீவில் இன்று (09) மாலை இச்சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் கணபதிபுரம் பகுதியில் வசிக்கும் எஸ்.சோதிலிங்கம் (வயது 59) என்ற விவசாயியே உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மல்வத்தை கணபதிபுரம் கிராமத்திலிருந்து மல்லிகைத்தீவு வயல் பகுதிக்குள் பொன்னாங்கன்னி பிடுங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே அவ்விடத்துக்கு வந்த காட்டு யானை தாக்கியதால் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.