மத்திய கிழக்கில் இருந்து 664 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

மத்திய கிழக்கை சேர்ந்த மூன்று நாடுகளில் இருந்து 664 இலங்கையர்கள் இன்று (10) அதிகாலை தாயகம் திரும்பினர்.

அதன்படி, கட்டாரின் தோஹாவில் இருந்து 81 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் இருந்து இன்று அதிகாலை 4.53 க்கு 293 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோல், சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து 290 இலங்கையர்கள் இன்று அதிகாலை 4.23 மணியளவில் மத்தல விமான நிலையம் வந்தடைந்ததாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.