இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் பலியான இலுப்பக்கடவை கிராம உத்தியோகத்தர்

மன்னார் – இலுப்பைக்கடவை கிராம உத்தியோகத்தர் நேற்றிரவு தாக்குதல் சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

54 வயதுடைய குறித்த கிராம உத்தியோகத்தர், ஆத்திமோட்டை பகுதிக்கு சென்று நேற்றிரவு உந்துருளியில் திரும்பியபோது, காட்டுப்பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தாக இலுப்பைக்கடவை காவல்துறை பொறுப்பதிகாரி எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் கிடைக்கப்பெறவில்லை என்றும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

x