கொரோனா தொற்றுக்குள்ளான 137 பேர் அடையாளம்

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 5 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 132 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 332 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தொற்றுறுதியான 5 ஆயிரத்து 733 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

x