பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமனம்

நாடாளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், பிரதமரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அங்கீகரித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் காவல்துறைமா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர்பதவிகளை நியமிப்பதற்கு குறித்த நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

x