சிநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சிநேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியினைப்பெற்று மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வதற்கான அனுமதி பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தினை அனுகும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

x