´MT New Diamond´ கப்பல் தீ விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த கடல் நீரினை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பல் தற்போதைய நிலையில் சுமார் 50 கடல் மைல் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலின் காப்பு நிறுவனத்தின் நிபுணர்கள் இன்றும் (10) கப்பலில் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
சுழியோடிகளை ஈடுபடுத்திய கப்பலை ஆய்வுக்குட்படுத்த திட்டமிட்டிருந்த போதும் சீரற்ற வானிலை காரணமாக குறித்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.