ஆயுதங்களுடன் மூவர் கைது

திக்வெல்ல, போதரகன்த பகுதியில்  ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திக்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து போரா 12 வகை துப்பாக்கி ஒன்று, டி கடஸ் வகை துப்பாக்கி ஒன்று, கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்று, போரா 12 வகை துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் 27, சட்டவிரோத கத்தி மற்றும் வாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதரகன்த, ஊருகமுவ பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.