புதிதாக 6 தூதுவர்கள் – இந்திய உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட

6 நாடுகளுக்கான இராஜதந்திரிகளை நியமிப்பது தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

குறித்த பதவிக்காக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் தகுதிகள் பரிசோதனை செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஆப்கானிஸ்தானிற்கான இலங்கை தூதவராக ஓய்வு பெற்ற அத்மிரல் கே.கே.வீ.பீ ஹரிச்சந்திர த சில்வாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஜப்பானுக்காக இலங்கை தூதவராக சஞ்சீவ குணசேகரவின் பெயரும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதவராக ரவிநாத் ஆரியசிங்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸிற்கான இலங்கை தூதவராக பேராசிரியர் ஷானிக ஹிரிபுரேகமவின் பெயரும் சீனாவிற்கான இலங்கை தூதவராக கலாநிதி பாலித கொஹொனாவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொடவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்கள் தொடர்பில் எந்தவொரு நபருக்கும் கருத்து தெரிவிக்க முடியும் எனவும் அதனை செப்டம்பர் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலமாக அறிவிக்குமாறும் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

குறித்த இராஜதாந்திரகள் தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் அவர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.