தியத உயனவிற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

பாராளுமன்ற வீதியின், பொல்துவ பாலத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று (10) காலை இனங்காணப்பட்டுள்ளது.

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொரள்ள – கொட்டாவ வீதியின் தியத உயனவிற்கு அருகில் உள்ள பொல்துவ பாலத்தின் கீழ் நீரில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.