யாழில் போதைப் பொருளுடன் இளைஞர்கள் கைது

யாழ். அளவெட்டி நரியிட்டான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது நேற்று செய்யப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையின் போது நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 21 வயது உடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 45 மற்றும் 47 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.