வெளிநாடு செல்ல காத்திருக்கும் 5 இலட்சம் அரச ஊழியர்கள்!

அரசாங்க ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 500,000 பேர் வெளிநாடு செல்ல தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை அனுப்பும் பொறுப்பை மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்பு துறையிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசு மேலும் சிக்கலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தம்மை நாட்டுக்கு அனுப்புவதற்கு உரிய வேலைத்திட்டத்தை மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்பு துறை தயாரிக்கவில்லை என சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தற்போது முறைப்பாடு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அரச ஊழியர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் 5,000 அசர ஊழியர்களை வெளிநாட்டு தொழிலுக்காக அனுப்ப மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்பு துறை எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.