பரீட்சை பெறுபேறு ஓகஸ்ட் மாதத்தில் – உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், நடைமுறை பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒரு மாத காலத்துக்கு பிற்போடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராகும் காலத்தை கருத்திற்கொண்டே இந்த முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.