போக்குவரத்து மற்றும் சேவைக் கட்டணங்களில் திருத்தம் செய்ய அனுமதி

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இரு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை விலைசூத்திரம் பயன்படுதப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், கட்டணங்களைத் திருத்துவது குறித்து கலந்துரையாடுமாறும் போக்குவரத்துத் துறையிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.