எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான காரணம்

எரிபொருள் விலைகள் தொடர்பான விலைச்சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த விலைச்சூத்திரத்தில் எரிபொருள் இறக்குமதி செலவுகள், தரையிறக்கும் செலவுகள், விநியோக செலவுகள் மற்றும் வரி செலவுகள் ஆகியவை உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விலைச்சூத்திரத்தில் வருமானம் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.