பெற்றோல், டீசலின் விலைகள் 400 ரூபாயைத் தாண்டியது

இன்று முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டென் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாக அதிகரிப்படவுள்ளதோடு, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 400 ரூபாவாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும், தொடர்ந்து நட்டத்தில் இயங்கிவரும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினரின் நலன் கருதி மண்ணெண்ணெய் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்கவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.