சஜித்துக்கு அவசர கடிதமொன்றை அனுப்பினார் ரணில்

“சம்பிரதாய அரசியலில் இருந்து விலகுவோம்.ஆட்சியில் பொறுப்பேற்று நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முன்வாருங்கள்” – சஜித்திற்கு ரணில் கடிதம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும், எதிர்கால சந்ததியினரின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, இந்த தருணத்தில் கட்சி பேதமின்றி தாய்நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமெனவும், அதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.