இந்திய சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20-20 போட்டிகள் நடாத்த திட்டமிடப்பட்டள்ளன. மேலும் பெங்களூரு மற்றும் மொஹாலியில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியத்தை மேற்கோள் காட்டி, இந்த தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி இரவு பகலாக நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.