ஹோமாகம வைத்தியசாலை கோவிட் நோயாளிகளால் நிரம்பியது!

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கோவிட் தொற்று உள்ளவர்களுக்கான  இரண்டு வார்டுகளும் இப்பொழுது நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர். ஜனித ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களுக்குள் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

நோயாளிகளுக்காக 75 கட்டில்கள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அதில் இப்போது 81 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், மேலும் மருத்துவமனை ஊழியர்களில் 23 பேருக்கு கோவிட் தொற்றுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர். ஜனித ஹெட்டியாராச்சி,

”ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கோவிட் தொற்று உள்ளவர்களுக்கான  இரண்டு வார்டுகளும் இப்பொழுது நோயாளிகளால் நிரம்பியுள்ளது. கடந்த சில நாட்களுக்குள் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நோயாளிகளுக்காக  ஒதுக்கப்பட்டிருந்த கட்டில்களில் இப்போது அதிக நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனை ஊழியர்களில் பலருக்கு கோவிட் தொற்றுள்ளதாகவும் அறியப்படுகின்றது.  மீண்டுமொரு கோவிட் அலை வருவதைத் தடுக்க, பூஸ்டர் டோஸை  அனைவரும்  விரைவில் பெறுவது  முக்கியம் “

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத்,  நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நாட்டில் சவாலான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

“ஒமிக்ரோன் தீவிரமானது அல்ல, ஆனால் இதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான  நோய் அறிகுறியற்ற நோயாளிகள்  உருவாகலாம். இது சுற்றுச்சூழலில் நோயைப் பரப்பும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும். நோய் பரவும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ​​பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்க்கு சிக்கல்கள் ஏற்பட்டு இறக்க நேரிடலாம். இது வரையில் நோயாளிகள் 50% க்கும்  மேல் அதிகமாகியுள்ளனர்.  இந்நோயாளிகள் ஓமிக்ரோன்  தொற்றுள்ளவர்களாக இருக்கலாம்.