இன்னும் இரண்டு பாராளுமன்ற அமைச்சர்களுக்கு கோவிட் தொற்று!

இன்னும் இரண்டு பாராளுமன்ற அமைச்சர்களுக்கு கோவிட்- 19 தொற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சாரதி துஷ்மன்த மற்றும் நாலக பண்டார  கோட்டேகொட என்ற இரண்டு அமைச்சர்களுக்கே இவ்வாறு கோவிட்- 19 தொற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று நடந்த பாராளுமன்ற அமர்வில் அமைச்சர் சாரதி துஷ்மன்த கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் கடந்த 4 நாட்களுக்குள் 4 பாராளுமன்ற அமைச்சர்களுக்கு கோவிட்- 19 தொற்று ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் சரத் வீரசேகர அவர்களுக்கு வைரஸ் தொற்றுள்ளதாக இரு நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகியுள்ளதோடு, சாணக்கியன் ராசமாணிக்கம் அவர்களுக்கு வைரஸ் தொற்றுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.