புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

2021 ஆம் வருடத்தில் நடைப்பெற இருந்து ஒத்திவைக்கப்பட்டிருந்த புலமைப்பரிசில்  பரீட்சை இன்று ( 22 ஆம் திகதி ஜனவரி மாதம் 2022 ) நடைப்பெற்றது.

அந்தவகையில் இன்று புலமைப்பரிசில் பரீட்சைக்கு 340,508 பரீட்சார்த்திகள்  தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்திருந்தார். 2, 943 பரீட்சை நிலையங்களில் மற்றும் 108 விஷேட பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்பெற்றது.

கோவிட்-19 தொற்று பேரழிவின் மத்தியிலும் எந்தவொரு மாணவருக்கும் முறைகேடு நிகழாமல், கோவிட் – 19 தொற்றில் பாதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சிறார்களுக்கும் விஷேட வழிக்காட்டலின் கீழே புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றுக்குட்பட்ட  சிறார்களுக்கு ஒரு பிராந்தியத்திற்கு ஒரு விஷேட பரீட்சை நிலையம் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் 108 விஷேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் கோவிட்-19 தொற்றுள்ள சிறார்கள் தங்களுக்கு  அண்மையிலுள்ள விஷேட பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பி. சி. ஆர் அல்லது ரெபிட் என்டிஜன் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து விஷேட பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் ஏப்ரல் மாத சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு முன்னதாக புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அவர் நம்பிக்கைப் பிறப்பித்துள்ளார்.