இரத்தினபுரியில் நோய் நிலைமைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை!

இரத்தினபுரி மாவட்டத்தில் சுரங்கத் தொழிலாளர்கள், தேயிலை தொழிலில்  ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் நாளாந்த கூலித் தொழிலாளர்கள்  ஆதரைட்டீஸ் நோயினால் பெரிதும் அவதியுறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இயன் மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்)  மிதுன் செனவிரத்ன தெரித்துள்ளார். 

”இந்தத் தொழிலாளர்கள் முறைப்படி சிகிச்சைகள் மேற்கொள்ளாத காரணத்தினால் மூட்டுகளின் எலும்புகளில் குருத்தெலும்பு தேய்மானத்தை அதிகரிக்கிறது. இத்தேய்மானம் அதிகரித்தால் முழங்கால் மூட்டுகளைப் பொறுத்தும் நிலைக்கு உள்ளாகக்கூடும்.”