3 நாட்கள் 100 இலட்சம்!!!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டமான அத்துகல்புர நுழைவு திறந்து வைக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதியில் 50,000 வாகனங்கள் பயணித்துள்ளதோடு 100 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

15 ஆம் திகதி ஜனவரி மாதம் 2022, சனிக்கிழமை அன்று மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான பகுதி திறந்து வைக்கப்பட்டதையடுத்து, முதல் 12 மணித்தியாலங்களுக்குள் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை 16ஆம் திகதி ஜனவரி மாதம் 2022, மதியம் 12.00 மணிக்குப் பிறகு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க, கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலையில் 6ஆம் திகதி ஜனவரி மாதம் 2022 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல்,  17ஆம் திகதி ஜனவரி மாதம் 2022 திங்கட்கிழமை நள்ளிரவு வரை, 23,039 வாகனங்கள் பயணித்துள்ளன.இந்த மூன்று நாட்களில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இந்த தினத்திலே சென்றுள்ளதாகவும், மேலும்  அன்றைய தினம் 4,865,500.00 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னண்டோ  தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பிரிவில் மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாற்று இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.