ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மீண்டும் தாழிறக்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளுக்கு மழை பெய்து வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளன.

இந்நிலையில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை 66 மைல் கல்லுக்கு அருகாமையில் உள்ள வீதியின் ஒரு பகுதி மீண்டும் தாழிறக்கத்திற்குட்பட்டுள்ளது. இவ்விடம் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் தாழிறங்கியிருந்தது . எனினும் உரிய முறையில் அவ்வீதி சீரமைக்கப்படாததனால் தற்போது பாரிய அளவில் வெடிப்புக்கள் தோன்றியுள்ளன.

எனவே குறித்த வீதியில் பயணஞ் செய்ய பார ஊர்திகள் இவ்விடத்தில் விபத்திற்குள்ளாவுவதற்கான சூழ்நிலைகள் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த இடத்தில் சுமார் ஒன்றரை அடிவரை நிலம் தாழிறக்கத்திற்கு உட்பட்டுள்ளதுடன் ஒருவழி பாதையிலும் பாரிய வெடிப்புக்கள் காணப்படுகின்றன.

எனவே குறித்த இடத்தில் விபத்தொன்று ஏற்படுவதற்கு முன் உரிய அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.