இனி உங்கள் ஊரில் மின்வெட்டு அமுலாகும் விதம் இதோ !

நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கும் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிரதேசங்களின் அடிப்படையில் இந்த மின்வெட்டு இடம்பெறவுள்ளதுடன் அதுதொடர்பான விபரங்கள் மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ளன.

ஞாயிற்று கிழமை தவிர்ந்த ஏனைய வார நாட்களில் A,B,C மற்றும் D என நான்கு குழுக்களாக பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் மாலை 5.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை குழுக்களின் அடிப்படையில் மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.