100,000 மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு

மியன்மாரிடம் இருந்து 100,000 மெற்றிக் தொன் அரிசியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வர்த்தக அமைச்சுக்கும் மியன்மார் அதிகாரிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெற்றக்கொள்ளப்படும் அரிசி, பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தி பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.