நீர் கட்டணம் அதிகரிப்பா?

30 அலகிற்கு மேல் நீரை பயன்படுத்துபவர்களின் நீர் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான நீர் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.