புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்

புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (03) பிற்பகல் நடைபெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் இறுதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறாததன் காரணமாக இன்று அமைச்சரவை பத்திரங்கள் பல விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.