மத்திய அதிவேக வீதி ஜனவரியில் மக்கள் வசம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வருகின்ற வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் திறக்கப்படும் என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக வீதியின் 2 ஆம் கட்டமான மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி ஜனவரி 15 ஆம் திகதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.