அரச ஊழியர்களுக்கான அழைப்பு

ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றுதல், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் முதலான நடைமுறைகள் அரச ஊழியர்களுக்கு அமுலாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அனைத்து அரச ஊழியர்களையும் மீண்டும் சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.