அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் மீண்டும் கொண்டு செல்லப்பட்டது

பயாகல – பேருவளை பகுதிகளுக்கு இடையே கரையோரமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சிறியரக பயிற்சி விமானம் ஒன்று மீண்டும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

பயாகல – பேருவளை பகுதிகளுக்கு இடையே கரையோரமாக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சிறியரக பயிற்சி விமானம் ஒன்று நேற்று  22ம் திகதி  அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதன்போது குறித்த விமானத்தின் பயிற்றுனரும், பயிற்சியாளர் ஒருவரும் இருந்துள்ளதாகவும் அவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை.

இயந்திர கோளாறு காரணமாக குறித்த விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, விமானம் தரையிறக்கப்பட்ட இடத்துக்கு விமானப்படை மீட்பு குழுவொன்று சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.