நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பாகங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதற்கிடையில், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.