நாட்டை வந்தடைந்த மேலும் ஒருதொகை பைஸர் தடுப்பூசிகள்

இலங்கைக்கு மேலும் ஒருதொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் இன்று காலை டுபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.