லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் ஆரம்பம்

இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக லிட்டோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய லிட்ரோ நிறுவனம் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

அத்துடன் கெரவலபிட்டிய முனையத்தில் மேலும் இரு கப்பல்கள் அனுமதி கிடைக்கும் வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.