ஜேர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் உள்ள துணைத் தூதரகத்தை மூட தயாராகும் வெளிவிவகார அமைச்சு

ஜேர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் உள்ள துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸிலுள்ள துணைத் தூதரகம் என்பவற்றை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிவிவகார அமைச்சரின் உயர் அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பில் வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் நைஜீரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலகங்களை நிர்வகிப்பதில் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகவே, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரு துணைத் தூதரகங்கள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நைஜீரியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே அங்குள்ள தூதரகத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள், துணைத் தூதரகங்களின் பராமரிப்பு மற்றும் பணியாளர்களின் கொடுப்பனவு செலவுகள், 11 பில்லியன் ரூபாவை தாண்டும் என 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.