சிவனொளிபாதமலையின் யாத்திரை காலம் நாளை முதல் ஆரம்பம்

சிவனொளிபாதமலையின் யாத்திரை காலம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொலிபாதமலை விகாரையில் இருந்து புனித தந்த தாது இன்று சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இன்று காலை 5 மணிக்கு பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளிபாதமலை விகாரையில் இருந்து புனித தந்த தாது நான்கு வீதிகளின் ஊடாக சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பலாங்கொடை பொகவந்தலாவ வீதி, இரத்தினபுரி, அவிசாவளை ஹட்டன் வீதி, இரத்தினபுரி பலாபந்த வீதி, இரத்தினபுரி குருவிட்ட வீதி ஆகிய நான்கு வீதிகளில் புனித தந்ததாது கொண்டு செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.