பண்டிகை காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடா?

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரங்கணக்கான கொள்கலன்களை விடுவிப்பதற்கு, குறைந்தப்பட்சம் 25 மில்லியன் டெலர் நிதியை (17) இன்றைய தினம் பெற்றுக்கொடுக்காவிட்டால் பண்டிகை காலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க முடியாமல் போகுமென வர்த்தக அமைச்சுக்கு இறக்குமதியாளர்கள் நேற்று (16) தெரிவித்துள்ளனா்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இறக்குமதியாளர்களுக்கு இடையில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனா்.

அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, சீனி, பெரிய வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இவ்வாறு தேங்கியுள்ள கொள்கலன்களில் உள்ளடங்கியுள்ளன. இந்த உணவுப் பெருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்காக டொலர் இன்மையினால் தொடர்ந்து இந்த கொள்கலன்கைள தேக்கிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளத. இதனால், உருளைக் கிழங்கு , பெரிய வெங்காயம் என்பன பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளா்கள் மேலும் தெரிவித்துள்ளனா்.

இறக்குமதியாளர்களின் கோரிக்கைகமைய தேவையான டொலரை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மத்திய வங்கியிடம் நேற்று (16) கடிதத்தினூடாக அறிவித்துள்ளாா். கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் தாமத கட்டணத்தை அறவிட நேரிடும் என்று இதன்போது இறக்குமதியாளா்கள் தெரிவித்துள்ளனா்.