லைட்டர் வெடித்து மீசை கருகியது..! யாழ்.சாவகச்சோியில் இரு சம்பவங்கள் பதிவு..

சாவகச்சேரி நகர் பகுதியில் சிகரெட் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன.

ஏற்கனவே சமையல் சிலிண்டர் கசிவும் , அடுப்புகள் வெடித்துவரும் நிலையில் சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது , லைட்டர் வெடித்துள்ளது. அதனால் , அவரது மீசை தீயில் கருகியது. இருந்த போதிலும் பெரியளவிலான அனர்த்தம் ஏற்படவில்லையென சொல்லப்பட்டது.

அதேவேளை நேற்று மாலை சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு அருகில் முதியவர் ஒருவர் லைட்டர் மூலம் சுருட்டை பற்ற வைக்க முனைந்த போதிலும் , லைட்டர் வெடித்துள்ளது.

இந்த சம்பவங்களையடுத்து லைட்டர்களில் நிரப்பப்படும் வாயுக்களின் தரம் குறித்தும் ஆராயப்படவுள்ளது.இந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை குறித்தும் விசாரிக்கப்படுகிறது.