இன்று முதல் புதிய சுகாதார வழிகாட்டல்

கொவிட் வைரஸ் தொற்றுக் காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இன்று (16) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் விஷேட வைத்தியர் அசேல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய சுகாதார வழிமுறைகளின் அடிப்படையில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி, திருமணங்களில் மது வழங்குவதற்கான தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.