கட்டானை பிரதேச சபையிலும் பொதுஜன பெரமுனவுக்கு தோல்வி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை பலத்தைக் கொண்ட கட்டானை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 17 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

கட்டானை பிரதேச சபையின் பொதுக்கூட்டம் இன்று (15) கட்டானை பிரதேச சபையின் தலைவர் நந்த விஜேரத்ன சில்வா தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் ஐக்கிய முன்னணியின் 15 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும், சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 7 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 5 உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.