மாத்தளை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெற்றி

மாத்தளை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான மாத்தளை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் மாநகர முதல்வர் எஸ்.பிரகாஷ் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று காலை 10 மணிக்கு சபையில் சமர்பிக்கப்பட்ட குறித்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 12 உறுப்பினர்கள் வாக்களிக்க அதற்கு எதிராக 03 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இதனால் மாத்தளை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 09 மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.