புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

புகையிரத ஓட்டுனர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (15) பிற்பகல் முதல் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த கொவிட் காலத்தில் பணிக்குத் சமூகமளிக்க முடியாத புகையிரத ஊழியர்களை பணிநீக்கம் செய்த காரணத்திற்காக இவ்வாற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், இன்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இதுவரையில் புகையிரதங்கள் எதுவும் சேவையில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.